வருமானவரி புதிய இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு!
வருமானவரி புதிய இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு!
வருமான வரிகளை செலுத்தும் முறைகளை மிகவும் எளிமைப்படுத்தும் வகையில் ‘www.incometax.gov.in’ என்ற புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த புதிய இணையதளத்தில், தொடங்கப்பட்ட 2வது நாளிலேயே தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘டுவிட்டர்’ பக்கத்தில் புகார்கள் குவிந்தன.
‘www.incometax.gov.in’ என்ற புதிய இணையதளத்தை ‘இன்போசிஸ்’ உருவாக்கி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் தமது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வரி கணக்கு தாக்கல் செய்வதை வரி செலுத்துவோருக்கு முக்கியமான மைல்கல் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிவிட்டிருந்தார்.
ஆனால், சற்று நேரத்தில் புதிய இணையதளத்தை திறக்க முடியவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதாகவும் பயனாளர்கள் புகார் தெரிவித்து இருந்தனர்.இதையடுத்து, கோளாறை சரிசெய்யும்படி உடனடியாக ‘இன்போசிஸ்’ நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில் ‘‘எனது பக்கத்தில் ஏராளமான குறைகள் தெரிவிக்கப் பட்டுள்ளன. தரமான சேவை அளிப்பதில், வரி செலுத்துவோரை இன்போசிஸ் நிறுவனமும், அதன் தலைவர் நந்தன் நிலேகனியும் கைவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. வரி செலுத்துபவர்கள் எவ்வித சிரமுமின்றி எளிதான அனுபவம் பெற வேண்டும் தான் நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
The much awaited e-filing portal 2.0 was launched last night 20:45hrs.
— Nirmala Sitharaman (@nsitharaman) June 8, 2021
I see in my TL grievances and glitches.
Hope @Infosys & @NandanNilekani will not let down our taxpayers in the quality of service being provided.
Ease in compliance for the taxpayer should be our priority. https://t.co/iRtyKaURLc