கொரோனா பரவல் அதிகரிப்பு.. தீவிர ஊரடங்கு குறித்து முதல்வர் நாளை முடிவு..!
கொரோனா பரவல் அதிகரிப்பு.. தீவிர ஊரடங்கு குறித்து முதல்வர் நாளை முடிவு..!
கர்நாடகாவில் கொரோனா 3-வது அலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது குறித்து நாளை நடக்க உள்ள மருத்துவ நிபுணர் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடகாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்ததால் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், பெங்களூரு நகரில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, கொரோனா தொற்று பவரலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தாலாமா? என கர்நாடக அரசு திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “பெங்களூரு நகரில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது.
தொற்று பரவலை தடுக்க ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்து வரும் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்துவது குறித்து நாளை (4ம் தேதி) நடக்க உள்ள நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்படும்.
அப்போது, எந்த மாதிரியான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். இதை தொடர்ந்து, 6-ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் ஊரடங்கு தீவிரப்படுத்துவது குறித்து அனுமதி பெற்று முறையாக அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.