அரசு தொழிலாளர்களுக்கு இனி.. ஆண்டுக்கு 2 முறை சம்பள உயர்வு!!

மத்திய அரசு தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தி.. ஆண்டுக்கு 2 முறை சம்பள உயர்வு!!

Update: 2020-03-05 14:10 GMT

தொழில்துறை தொழிலாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுக்கு இருமுறை சம்பள உயர்வு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  
இந்த ஆண்டு ஹோலி பண்டிகை நாளில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இத்திட்டத்தின் படி, பணவீக்க குறியீட்டின்படி ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும். அதிகரித்து வரும் பணவீக்கத்தின் சுமையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் 3 கோடி தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. 

முதன்மை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர் பி.என்.நந்தா தலைமையிலான முத்தரப்பு குழு, சமீபத்தில், இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு அடிப்படை ஆண்டாக 2016ஆம் ஆண்டை மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, வரும் காலங்களில் பணவீக்க குறியீட்டின்படி சம்பள உயர்வு நிர்ணயிக்கப்படும். இதனால், அதிகரித்து வரும் பணவீக்கத்தின் சுமை, குறையும் என, பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News