இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு ! குறையும் உயிரிழப்பு !!

இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு ! குறையும் உயிரிழப்பு !!

Update: 2021-07-18 10:24 GMT

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 41,157 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல குறைந்து வந்த தொற்று எண்ணிக்கை 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் 40 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.   

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 518 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.  42,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியா முழுவதும் ஒப்பிடும் போது உத்தரப்பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 4.03 (4,03,52,500) கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 3.93 கோடி பேருக்கு, குஜராத்தில் 2.93 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 2.83 போடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1.93 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 4,22,660 பேர் நோய் தொற்றால் பாதிப்பு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது சிகிச்சையில் இருப்போர் விகிதம் 1.36% ஆக உள்ளது. அதில் அதிகமாக கேரளாவில் 1,22,573 பேர் சிகிச்சையில் உள்ளனர். மகாராஷ்டிராவில் 1,03,745 பேரும், கர்நாடகாவில் 30,105 பேரும், தமிழ்நாட்டில் 28,590 பேரும், ஆந்திராவில் 25,041 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 518 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் அதிக இறப்பு பதிவாகியுள்ளது. அங்கு 124 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்ததாக கேரளாவில் 114 பேரும், ஒடிசாவில் 67 பேரும், தமிழ்நாட்டில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 4,13,609 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு விகிதம் 1.33ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 3,02,69,796 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது 97.31 சதவீதம் பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை புள்ளிவிவரம் மூலம் தெரியவருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 13,197 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் 8,950 பேரும், கர்நாடகாவில் 3,144 பேரும், தமிழ்நாட்டில் 2,802 பேரும், அசாமில் 2,495 பேரும் ஒரே நாளில் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரை 40,49,31,715 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 51,01,567 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 44.39 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 19,36,709 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

newstm.in

Tags:    

Similar News