அதிகரிக்கும் கொரோனா! 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?!

அதிகரிக்கும் கொரோனா! 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?!

Update: 2021-04-28 16:32 GMT

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி  வருகிறது.  சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் அதிகமாகி பதிவாகி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தை நெருங்கியுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் , மருந்துகள், ஆக்சிஜனுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

இந்நிலையில்,  கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத்துறை, உயர்மட்டக்குழு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில் தொற்று பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்களில்  முழு ஊரடங்கை கொண்டு வரலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது . 

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகமாக உள்ள 150 மாவட்டங்களிலுல்  முழுமையான ஊரடங்கை அமல்படுத்தலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.  அந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசிடம் சுகாரத்துறை சிபாரிசு செய்து உள்ளது. 

எனினும், இது குறித்த இறுதி முடிவுகள் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட  பிறகே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம். அந்த வகையில்  தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, கோவை உட்பட 15 மாவட்டங்களில் 15 %ற்கும் மேல் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Tags:    

Similar News