100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை..!
100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை..!
இந்தியாவில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. 9 மாதங்களில், 100 கோடி தடுப்பூசி என்ற மைல் கல்லை இந்தியா எட்டியுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் உத்தரகண்டில் அதிகமான முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது. இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் 21 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 51 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசி மட்டுமே போட்டு உள்ளனர்.