12 நாடுகளில் இருந்து இந்தியா வர தடை - எந்தெந்த நாடுகள் என்று பாருங்கள்!
சீனா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனா, தென் கொரியா உள்பட சில நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12 நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் பயணிகள் இந்தியாவிற்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனா, தென் கொரியா உள்பட சில நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வரும் பயணிகளை கண்காணிக்கவும் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது எனவும், அந்த நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில், பயணிகள் இந்தியாவிற்கு வர தற்காலிக தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
newstm.in