இந்தியா – இங்கி. 2ஆவது டெஸ்ட்.. முன்பதிவு தொடங்கிய வேகத்தில் டிக்கெட் காலி !!

இந்தியா – இங்கி. 2ஆவது டெஸ்ட்.. முன்பதிவு தொடங்கிய வேகத்தில் டிக்கெட் காலி !!

Update: 2021-02-09 16:11 GMT

 

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரத்திலேயே முடிந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 டி20, 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை. இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 13ஆம் தேதி தொடங்குகிறது.

அதற்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் நேற்று தொடங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் போட்டி என அறிவிக்கப்பட்டு இருப்பதால் தமிழக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.  

2 ஆவது டெஸ்ட் போட்டியின்போது மைதானத்துக்குள் 50 சதவீத ரசிகர்களை அனுமதிப்பது என பிசிசிஐயும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் முடிவெடுத்துள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 38 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். தற்போது 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதன் மூலம் போட்டி நடைபெறும் நாள்களில் தினந்தோறும் 19 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவுள்ளனர்.  

அந்த வகையில் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு www.paytm.com, www.insider.in ஆகிய தளங்களில் நேற்று காலையில் தொடங்கியது. ஆர்வமுடன் ரசிகர்கள் டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டும்  காலியானது. இதனால் டிக்கெட் கிடைக்காத ரசிகர்கள் ஏமாற்ம் அடைந்தனர்.

2ஆவது டெஸ்ட் போட்டியின் போது 19 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் இருப்பர் என்பதால் மிகவும் ஆரவாரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

newstm.in

Tags:    

Similar News