இந்திய ஒருநாள், டி20 அணி அறிவிப்பு- ரோகித் கேப்டன்.. பிஷ்னோய் சேர்ப்பு, ஷாருக்கானுக்கு இடமில்லை !!
இந்திய ஒருநாள், டி20 அணி அறிவிப்பு- ரோகித் கேப்டன்.. பிஷ்னோய் சேர்ப்பு, ஷாருக்கானுக்கு இடமில்லை !!
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி, 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அதன் பிறகு டி20 போட்டிகள் 16ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனியர் வீரர்களான விராட் கோலி, கே.எல். ராகுல் இந்த தொடரில் விளையாடுகின்றனர். ஆனால் பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2ஆவது ஒருநாள் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் களமிறங்குவார். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் இன்னும் காயத்திலிருந்து குணமடைய வில்லை. இதனால் அவர்கள் இத்தொடரில் சேர்க்கப்படவில்லை.
இதில் தமிழக வீரர் ஷாரூக்கான்-க்கு இந்த முறையும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. காயத்திலிருந்து குணமடைந்துள்ள அக்சர் பட்டேல் அணிக்கு திரும்பியுள்ளார். ஒருநாள் தொடரில் இடம்பெறாத வெங்கடேஷ் ஐயர் டி20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். இஷான் கிஷன் டி20 போட்டியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை.
இதேபோல் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருவதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இடமில்லை என தெரிகிறது. அவருக்கு பதில் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான ஒருநாள் அணியில், அறிமுக வீரராக ரவி பிஸ்னாய் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சாளரான இவர் U 19 உலகக் கோப்பையில் கலக்கி, ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர். காயம் காரணமாக ஓய்வில் இருந்த குல்தீப் யாதவ் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். ராஜஸ்தான் வீரர் தீபக் ஹூடாவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி:-
ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (துணை கேப்டன்.), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர், விராட் கோலி, சூர்யா குமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (வி.கீ), சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான்..
வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இந்திய டி20 அணி:-
ரோஹித் சர்மா (கே), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யா குமார் யாதவ், ரிஷப் பந்த் (வி.கீ), வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், ஷர்துல், ரவி பிஷ்னோய், அக்சர் படேல், சாஹல், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல்.
ODI squad: Rohit Sharma (Capt), KL Rahul (vc), Ruturaj Gaikwad, Shikhar, Virat Kohli, Surya Kumar Yadav, Shreyas Iyer, Deepak Hooda, Rishabh Pant (wk), D Chahar, Shardul Thakur, Y Chahal, Kuldeep Yadav, Washington Sundar, Ravi Bishnoi, Mohd. Siraj, Prasidh Krishna, Avesh Khan
— BCCI (@BCCI) January 26, 2022
newstm.in