உலக அளவில்  தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா காரணமாக வரலாறு காணாத அளவு பொருளாதாரச் சரிவு ஏற்பட்டுள்ளதாக உலக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு வரும் நிலையில் உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. இதில் உலக வங்கி தலைவர் ஆற்றிய உரையில் இருந்து உலகம் முழுவதும் கொரோனாவால் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது.  நடுத்தர குடும்பத்தினரின் வருவாய் மேலும் குறையும் அபாயம்  அதிகமாக உள்ளது.

அதே வேளையில் உலக பொருளாதாரம் வேகமான வளர்ச்சி கண்டு வருவதற்கு மிக முக்கிய காரணம்  அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வருவதே எனத் தெரிவித்துள்ளார்.

Tags: