கொரோனவால் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்!

கொரோனவால் இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்!

Update: 2021-05-11 19:25 GMT

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புது உச்சத்தை தொட்டு வருகிறது. ஒருநாளுக்கு சுமார் 4 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனவால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . இதனை பியூஸ் சாவ்லா தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பியூஸ் சாவ்லா தந்தையின் மறைவுக்கு ரசிகர்களும், வீரர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதை அறிந்த சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் , "தனது தந்தை பிரமோத் குமார் சாவ்லாவை இழந்த பியூஷ் சாவ்லாவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா இறைவனடி சேர பிராத்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்"


32 வயதான பியூஷ் சாவ்லா இதுவரை இந்திய அணிக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 136 முதல் தரப் போட்டிகளில் விளையாடி, 445 விக்கெட்டுகளை சாவ்லா கைப்பற்றியுள்ளார்.

Tags:    

Similar News