இந்திய மருத்துவர்கள் அதிர்ச்சி.. பிரபல டாக்டர் கேகே அகர்வால் கொரோனாவால் பலி !!

இந்திய மருத்துவர்கள் அதிர்ச்சி.. பிரபல டாக்டர் கேகே அகர்வால் கொரோனாவால் பலி !!

Update: 2021-05-18 17:03 GMT

இந்தியாவில் பிரபலமானவர் டாக்டர் கேகே அகர்வால். இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான இவரது சேவைக்கு கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. இந்நிலையில் டாக்டர் கேகே அகர்வாலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று ஏற்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு தனி கண்காணிப்பில் வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டுவந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். டாக்டர் கேகே அகர்வாலின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

அதேநேரத்தில் இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 டாக்டர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில், பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் நாடு முழுவதும் 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 63 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 52 லட்சத்து 28 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 436 பேர் குணமடைந்துள்ளனர்.  

newstm.in

Tags:    

Similar News