பதஞ்சலி செயலால் இந்திய மருத்துவக் கழகம் கடும் அதிர்ச்சி!!

பதஞ்சலி செயலால் இந்திய மருத்துவக் கழகம் கடும் அதிர்ச்சி!!

Update: 2021-02-23 16:40 GMT

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக போராடி வருகிறது. சில நாடுகள் அவசரகால பயன்பாட்டிற்காக தடுப்பூசிகளை அறிவித்துள்ளன. அந்த வகையில் இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட  கோவேக்சின், மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழ் பெற்றது என்ற விளம்பரத்துடன் கொரோனாவுக்கு பதாஞ்சலி நிறுவனம் மருந்து ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவக் கழகம் அதிர்ச்சித் தகவல் ஒன்றை  வெளியிட்டுள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ளும் திறன் பெற்றது என்ற விளம்பரத்துடன் பதஞ்சலி நிறுவனம் கரோனில் என்ற மாத்திரையை அறிமுகம் செய்தது. இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ,மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர்  ஆகியோர் கலந்து கொண்டது குறித்து  இந்திய மருத்துவக் கழகம்  கேள்வி எழுப்பியுள்ளது.

நாட்டின்  மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஒருவர்,  அறிவியல்பூர்வமாக அங்கீகாரம் பெறாத, பொய்யான விளம்பரங்களுடன் கூடிய மருந்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கலாமா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Tags:    

Similar News