இந்தியாவின் நிலவரம் நெஞ்சை உலுக்குகிறது... உலக சுகாதார அமைப்பு வேதனை !!

இந்தியாவின் நிலவரம் நெஞ்சை உலுக்குகிறது... உலக சுகாதார அமைப்பு வேதனை !!

Update: 2021-04-27 13:15 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உலகளவில் தினசரி பாதிப்பில் இந்தியாவில் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கும் மேல் பதிவாகி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இன்று சற்று குறைந்திருப்பது நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. 

கொரோனா பாதிப்பால் மிகக்கடுமையான சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், மலேசியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்ட  முன்வந்துள்ளன.

 
இந்தநிலையில், இந்தியாவில் நிலவும் கொரோனா பாதிப்பு மிகுந்த வேதனை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவில் நிலவும் சூழலை பார்க்கும் போது நெஞ்சை உலுக்குகிறது. முக்கியமான உபகரணங்கள் வழங்குவது, விநியோகம் செய்வது என எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். 

இதுவரை ஆயிரக்கணக்கில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் ஆய்வுக் கூடங்களுக்கான வசதிகளையும் நடமாடும் மருத்துவமனை வசதிகளையும் ஏற்படுத்தியுள்ளோம். கொரோனா பரவலில் இந்தியாவுக்கு உதவ போலியோ, காசநோயைபோல் 2,600-க்கும் மேற்பட்ட நிபுணர்களை அனுப்பியுள்ளோம் என்றும் கூறினார். 

newstm.in 

Tags:    

Similar News