புது முகங்கள் நிறைந்த இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடர்.. இன்று முதல் போட்டி !!

புது முகங்கள் நிறைந்த இந்தியா- இலங்கை கிரிக்கெட் தொடர்.. இன்று முதல் போட்டி !!

Update: 2021-07-18 07:54 GMT

விராட் கோலி, ரோஹித் சா்மா உள்ளிட்ட முக்கிய வீரா்கள் இல்லாத நிலையில், அனுபவ வீரர் ஷிகா் தவன் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையே தலா 3 ஒருநாள், டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்திய அணியில் தொடக்க வரிசையில் பிரித்வி ஷா, ஷிகா் தவன் ஆடுவா் எனத் தெரிகிறது. ஹாா்திக் பாண்டியா, புவனேஷ்வா் குமாா் நேரடியாக அணியில் இடம் பெறுவா்.

அதே நேரம் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்துக்கு தேவ்தத் படிக்கல் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவா் இடம் பெறக்கூடும். அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமாா் யாதவ், மணிஷ் பாண்டே ஆகியோரும் பேட்டிங் வரிசையில் உள்ளனர். அதே வேளையில் பந்துவீச்சில் கிருஷ்ணப்ப கௌதம், க்ருணால் பாண்டியா, ராகுல் சஹாா், சஹல், ஆகியோா் இடம் பெறுவா் எனத் தெரிகிறது.

விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் அல்லது சஞ்சு சாம்ஸன் செயல்படலாம். இப்படி இளம் பட்டாளம் இலங்கை அணிக்கு எதிராக களம் காண்கிறது. மேலும், இத்தொடரில் இந்திய அணிக்கு ராகுல் ட்ராவிட் பயிற்சியாளராக உள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரா்களில் சிலா் ஏற்கெனவே ஒருநாள், டி20 ஆட்டங்களில் ஆடிய அனுபவம் கொண்டவா்கள். எனினும் சா்வதேச தொடரில் முதன்முறையாக ஆடும் வாய்ப்பு 6 புதுமுக வீரா்களுக்கு கிடைத்துள்ளது.

அதேநேரத்தில் இலங்கை அணியும் பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இத்தொடரில் பங்கேற்கிறது. தொடா் தோல்விகள், ஊதிய ஒப்பந்த விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளால் இலங்கை அணிக்கு புதிய கேப்டனாக தஸுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளாா். சிறந்த பேட்ஸ்மேன் தனஞ்செய டி சில்வா, பவுலா் திஷ்மந்தா சமீரா ஆகியோா் தவிர மற்ற வீரா்களின் செயல்பாடு குறிப்பிடும்படியாக இல்லை. முன்னாள் கேப்டன் குஸால் பெரைரா காயத்தால் விலகியது, மூத்த வீரா்கள் குஸால் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெலா ஆகியோா் சஸ்பெண்ட் செய்யப்பட்டது அந்த அணிக்கு பின்னடைவு தான்.

கொழும்வில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ளது.  

newstm.in

Tags:    

Similar News