ஒரேநாளில் பிறந்ததினம்.. 7 வயது விவேக்-க்கு கடிதம் எழுதிய இந்திரா காந்தி !!
ஒரேநாளில் பிறந்ததினம்.. 7 வயது விவேக்-க்கு கடிதம் எழுதிய இந்திரா காந்தி !!
நடிகர் விவேக் மறைவு இன்று ஒட்டுமொத்த திரையுலகத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்திவிட்டது. அவரது ரசிகர்களும் கண்ணீர் மல்க அவருக்கு விடைகொடுத்தனர். அவரது லட்சியமான ஒரு கோடி மரத்தை நட்டே தீர்வோம் என பல ரசிகர்கள் அவர் இறப்பு நாட்களில் சபதம் எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் விவேக் மறைவுக்கு பிறகு அவர் 2ஆம் வகுப்பு படிக்கும் போது செய்த செயல் ஒன்று தற்போது புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது. அதாவது, கடந்த 1969ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜய் பள்ளியில் விவேக் இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது, இந்திரா காந்திக்கும் விவேக்கிற்கும் ஓரே நாள் பிறந்த தினம் எனறு விவேக்கிற்கு அவரது தந்தை கூறியுள்ளார்.
அப்போது இந்திரா காந்தி நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். தனக்கும் பாரத பிரதமர் இந்திரா காந்திக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்த விவேக், உடனே தனது கைப்பட தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அப்போது இந்திரா காந்திக்கு அவர் வாழ்த்து கடிதம் எழுதினார்.
இதனால் மகிழ்ச்சியில் இருந்த விவேக்கிற்கு மேலும் ஒரு இன்பச் செய்தி கிடைத்தது. அதாவது விவேக் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் இந்திரா காந்தி பதில் கடிதம் எழுதினார் என்பது தான். அதாவது விவேக் கடிதத்திற்கு இந்திரா காந்தி தனது கைப்பட எழுதி பதில் அனுப்பியதை தற்போதும் தனது வீட்டில் விவேக் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்.
newstm.in