கெத்து காட்டும் கமர்ஷியல் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் முகென்- விபரம் உள்ளே..!

கெத்து காட்டும் கமர்ஷியல் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் முகென்- விபரம் உள்ளே..!

Update: 2021-02-20 14:06 GMT

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளர் முகென் ராவ் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார். கமர்ஷியல் மற்றும் அதிரடி அம்சங்களும் இப்படம் உருவாகவுள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த தமிழரான முகென் ராவ், பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்டு வெற்றிபெற்றார். இதன்மூலம் மிகவும் பிரபலமடைந்த அவர், சினிமாவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சமூகவலைதளங்களில் மட்டும் தீவிரமாக இயங்கி வந்தார்.

எனினும், வெப்பம் படத்தில் மூலம் இயக்குநராக கால்பதித்த அஞ்சனா அலி கான் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் முகென் ராவ். இந்த படத்திற்கு வெற்றி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய படத்திற்கு ‘வேலன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரபு, மீனாட்சி, சூரி, தம்பி ராமைய்யா நடிக்கின்றனர். இப்படத்தை அறிமுக இயக்குநர் கவின் இயக்குகிறார். இசையமைப்பாளராக கோபி சுந்தர் மற்றும் ஒளிப்பதிவாளராக கோபி ஜகதீஸ்வரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. 

Tags:    

Similar News