இன்ஸ்டா தொடர்பால் விபரீதம்: பள்ளி மாணவி கர்ப்பம்.. மாணவனுக்கு வலை !

இன்ஸ்டா தொடர்பால் விபரீதம்: பள்ளி மாணவி கர்ப்பம்.. மாணவனுக்கு வலை !

Update: 2022-01-09 09:40 GMT

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வசித்து வரும் ஒரு தம்பதிக்கு 16 வயதில் மகள் உள்ளார். பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் சிறுமிக்கு நேற்று முன்தினம் கடுமையான வயிற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர், அவரை சென்னை அரசு பொது மருத்துவமனை கொண்டு சென்றனர். 

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில், மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மருத்துவமனைக்கு சென்ற போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.


அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் (20) என்பவருடன், கடந்த 6 மாதத்துக்கு முன் சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம்  தொடர்பு ஏற்பட்டது. பின்னர், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளனர். இதனால் இவர்களது பழக்கம் காதலாக மாறியது.செல்போனில் பேசிவந்த இருவரும் நேரில் பார்க்க திட்டம்போட்டனர்.

அதன்படி, கடந்த 2 மாதங்களுக்கு முன் சஞ்சய் சென்னைக்கு வந்துள்ளார். அங்கிருந்து சிறுமியை, தனது பைக்கில் அழைத்து கொண்டு அவர் சென்னை முழுவதும் சுற்றி திரிந்தார். பின்னர் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்று சிறுமியை இளைஞர் சஞ்சய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமாகியுள்ளது தெரியவந்ததாக விசாரணை நடத்திய போலீசார் கூறுகின்றனர்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவர் சஞ்சயை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
 

newstm.in

Similar News