தமிழகத்தில்.. 'வட்டித் தள்ளுபடி திட்டம்'.. மார்ச் 31ம் தேதி முடிவு: அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில்.. 'வட்டித் தள்ளுபடி திட்டம்'.. மார்ச் 31ம் தேதி முடிவு: அரசு அறிவிப்பு!!

Update: 2020-03-01 13:44 GMT

 தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குனர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டங்களில், குடியிருப்பு அலகுகள் ஒதுக்கீடு பெற்றவர்களில், வட்டிச் சுமையினால் விற்பனைப் பத்திரம் பெற்றிடாமல் உள்ளவர்களுக்கு, மாதத் தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி, முதலாக்கத்தின் மீதான வட்டி ஆகியன முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியில், வருடத்திற்கு 5 மாத வட்டி மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டுள்ளது. 

அரசால் வழங்கப்பட்ட இச்சலுகை வரும் 31.03.2020 வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும். வட்டித் தள்ளுபடி திட்டத்திற்கு தகுதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு, ஏற்கனவே நிலுவைத் தொகைக்கான தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியான ஒதுக்கீடுதாரர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, சம்மந்தப்பட்ட அலுவலகங்களை அணுகி, தங்களது ஒதுக்கீட்டிற்கான நிலுவைத் தொகையினை, ஒரே தவணையில் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. 31.03.2020க்குப் பின்னர், நிலுவைத் தொகையினை செலுத்தும் ஒதுக்கீடுதாரர்களுக்கு, மேற்படி வட்டித் தள்ளுபடி சலுகை கிடைக்கப் பெறாது என்பதால், இந்த அரிய வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

newstm.in

Tags:    

Similar News