கணவருடன் நெருக்கம்.. வீடியோ வெளியிட்ட ரஜினி பட நடிகை !!

கணவருடன் நெருக்கம்.. வீடியோ வெளியிட்ட ரஜினி பட நடிகை !!

Update: 2021-07-05 18:35 GMT

பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஸ்ரேயா. நடிகை ஸ்ரேயா தெலுங்கு, மலையாளம், கன்னடா, இந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு ‘இஷ்டம் ‘என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதையடுத்து 2003 ஆம் ஆண்டு எனக்கு 20 உனக்கு 18 திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.  

அதன் பின்பு தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்தார். பின்பு 2007 ஆம் ஆண்டு ரஜினிக்கு ஜோடியாக சிவாஜி படத்தில் நடித்தார். அந்த படம் ஹிட் அடிக்க தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். பின்னர் திருமணம் செய்துக்கொண்டு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். தற்போது தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ’ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தில் ஸ்ரேயா நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ரேயா 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரே கோஸ்சீவ் என்ற ரஷ்ய டென்னீஸ் வீரரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் வாழ்ந்து வரும் ஸ்ரேயா அடிக்கடி கணவருடன் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுகிறார். அங்கு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொள்ளும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரேயா தனது கணவருடன் கடலில் பயணிக்கும் போது எடுத்துக்கொண்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். 

அதில் ஸ்ரேயா தனது கணவரிடம் ,நான் செய்யும் எந்த விஷயம் உனக்கு தொந்தரவாக இருக்கும் என்று ஸ்ரேயா கேட்க, அதற்கு அவரது கணவன் ’உன் போனில் அதிக ஸ்பேஸ் இல்லை என்று நீ கூறுவது தான்’ என்று சொல்கிறார். இந்த  வீடியோவை ‘Just like that' என்ற கேப்ஷனோடு ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

newstm.in

Tags:    

Similar News