இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்.. போச்சோவில் பிரபல சாமியார் கைது !
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம்.. போச்சோவில் பிரபல சாமியார் கைது !
இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் இளம்பெண் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 2012ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஷீரடி புரம் சர்வ சக்தி பீடத்தில் நிர்வாகியான சங்கர நாராயணன் என்பவரிடம், தனது பாட்டியுடன் விபூதி வாங்க சென்றுள்ளார். அப்போது அப்பெண் ப்ளஸ் 1 படித்து வந்துள்ளார்.
பின்னர் அடுத்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் சமயத்தில் மறுபடியும் அதே ஆசிரமத்தில் விபூதி வாங்க மாணவி சென்றுள்ளார். அப்போது பேச்சிக்கொடுத்த சங்கரநாராயணன் அவரது மனைவி புஷ்பா ஆகிய இருவரும் சேர்ந்து மாணவிக்கு ஜூஸ் கொடுத்துள்ளனர்.
அதைக் குடித்து மயக்க நிலைக்கு சென்ற மாணவியை சங்கர நாராயணன் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் இளம்பெண்ணுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு திருமணமாகியுள்ளது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்துவருகின்றனர். இதனிடையே சம்பாதிக்க அப்பெண்ணின் கணவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
பின்னர் திருமணமான இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக ஆசிரமத்திற்கு வரவழைத்த சாமியார் சங்கர நாராயணன் பயமுறுத்தி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் கர்ப்பம் அடைந்த இளம்பெண் ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுக்க நேரிட்டது. அதன்பின்னரும் மிரட்டி வந்ததால், இதுகுறித்து இளம்பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்தார் மகளிர் போலீசார் சாமியாரை அதிரடியாக கைது செய்தனர். பாலியல் தொந்தரவு, பாலியல் வன்கொடுமை தொடர்பாக உடனுக்குடன் புகார் அளித்தால் அதனை தடுப்பதோடு குற்றவாளிகள் மீது உடனே உறுதியான நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் போலீசார் கூறுகின்றனர்.
newstm.in