மிரட்டும் கொரோனா.. 2ஆவது அலையில் மட்டும் இந்தியாவில் 420 மருத்துவர்கள் மரணம் !!
மிரட்டும் கொரோனா.. 2ஆவது அலையில் மட்டும் இந்தியாவில் 420 மருத்துவர்கள் மரணம் !!
கொரோனா 2ஆவது அலை மிகவும் மோசமாக இருந்து வருகிறது, 2ஆவது அலையில் மட்டும் இதுவரை 420 மருத்துவர்கள் மரணமடைந்துள்ளதாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎம்ஏ) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஎம்ஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, கொரோனா வைரஸ் 2ஆவது அலையில் சிக்கி இதுவரை நாடு முழுவதும் 420 மருத்துவர்கள் உயிரிழந்தனர். இதில் ஐஎம்ஏ முன்னாள் தலைவரும், பிரபல மருத்துவருமான கே.கே.அகர்வால், டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் பணியாற்றிய 25 வயது இளம் மருத்துவர் அனாஸ் முஜாகித் உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.
அதிகபட்சமாக டெல்லியில் இதுவரை 100 மருத்துவர்களும், அடுத்ததாக பிஹார் மாநிலத்தில் 96 மருத்துவர்களும் இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 41 மருத்துவர்கள், ஆந்திராவில் 22 மருத்துவர்கள் உயிரிழந்தனர். குஜராத்தில் 31 மருத்துவர்கள், தெலங்கானாவில் 20 மருத்துவர்கள், மேற்கு வங்கம், ஒடிசாவில் தலா 16 மருத்துவர்கள், மகாராஷ்டிராவில் 15 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.
கொரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்த நிலையில் 2-வது அலை முடிவதற்குள் 420 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. ஐஎம்ஏ பதிவுகளின் படி முதல் அலையில் 748 மருத்துவர்கள் பலியாகினர்.
newstm.in