மிரட்டும் கொரோனா.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து !!

மிரட்டும் கொரோனா.. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து !!

Update: 2021-04-14 17:14 GMT

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுமுடக்கமும், பல மாநிலங்களில் இரவுநேர பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் பொதுமுடக்கம் அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அடியோடு மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் அண்மையில் கொரோனா தொற்று குறைந்துவந்தப்போது படிப்படியாக திறக்கப்பட்டு வந்தது. அதன்படி சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தோ்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மே 4ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று முன்பைவிட அதிகமாக பரவி வருவது பெரும் சவாலையும் அச்சுறுத்தலையும் உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் மத்திய கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதன்முடிவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு, மத்திய கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மே 4 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.

மே 4ஆம் தேதி தொடங்கவிருந்த 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 1ஆம் தேதி ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு தேதி அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  
newstm.in
 
 

Tags:    

Similar News