மிரட்டும் கொரோனா.. தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல் !!

மிரட்டும் கொரோனா.. தெலுங்கானாவில் இன்று முதல் 10 நாட்கள் முழு ஊரடங்கு அமல் !!

Update: 2021-05-12 07:12 GMT

கொரோனாவின் 2ஆவது அலை அச்சுறுத்தல் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கி வருகிறது. றாடு முழுவதும் தற்போது தினசரி பாதிப்பு சுமார் 4 லட்சம் என்ற அளவிலேயே ஏற்பட்டு வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. எனினும் கொரோனாவில் பரவல் அதிகரித்துக்கொண்டே இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே.கொரோனா பரவுவதை தடுக்க முழு ஊரடங்கு தான் தீர்வு என்று மருத்துவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கை கொண்டு வந்துள்ளனர். மகாராஷ்டிராவும், டெல்லி, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், அரியானா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், இமாச்சலபிரதேசம், மிசோரம், நாகலாந்து, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கானாவிலும் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் 10 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு விதித்துள்ளது. 


எனினும், ஊரடங்கின் போது காலை 6 மணி முதல் 10 மணி வரை என நான்கு மணி நேரம் மட்டுமே கடைகள்  திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகள் திறந்திருந்தாலும் அத்தியாவசியத் தேவைகள் இன்றி மக்கள் வெளியே சுற்றவேண்டாம் என அம்மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Newstm.in

Tags:    

Similar News