மிரட்டும் புது வகை கொராேனா.. மீண்டும் ஊரடங்கா? மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் !

மிரட்டும் புது வகை கொராேனா.. மீண்டும் ஊரடங்கா? மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் !

Update: 2021-11-28 21:42 GMT

சீனாவில் இருந்து கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் தோன்றிய கொரோனா இன்னும் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகளில் அடுத்தடுத்து அலை அலையாக தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ உலகம் பாேராடி வருகிறது. 

கொரோனா வைரசில் பலவித உருமாற்றங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருவதால் மருந்து கண்டுபிடிப்பதில் சவால் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகையில் உருமாறிய கொரோனா தொற்றும் மனித இனத்தை தாக்கி வருகின்றன. இந்த தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிகயமானதாக உலக நாடுகள் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தி வருகின்றன. 

இந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் எனும் மேலும் ஒரு உருமாறிய கொரானா வைரஸ் பரவி வருவது தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் என பல நாடுகளில் இதன் பாதிப்பு கண்டறியப்பட்டு இருக்கிறது. முந்தைய திரிபுகளை விட வீரியம் மிகுந்த வைரசாக கருதப்படும் இந்த தொற்று உலக நாடுகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்த வைரசுக்கு ஒமிக்ரான் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்த புதிய வைரசால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உலக நாடுகள், பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ள நாடுகளுக்கு பயணத்தடைகளை விதித்து உள்ளன. 

அந்த வரிசையில் இந்தியாவிலும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் குறித்து உலக நாடுகள் அஞ்சி வரும் நிலையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், பரிசோதனை தீவிரப்படுத்தி, கண்காணிப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தேவை ஏற்பட்டால் தனிமைப்படுத்தப்பகுதிகளை உருவாக்க வேண்டும், தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 


மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் அதேநேரத்தில் மாநில அரசுகளும் அடுத்தடுத்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு ஊரடங்கு வருமா என மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

newstm.in

Tags:    

Similar News