மிரட்டும் நிபா வைரஸ்: தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு !!

மிரட்டும் நிபா வைரஸ்: தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பு !!

Update: 2021-09-07 17:09 GMT

தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த பார்வையும் கேரளா பக்கம் தான் உள்ளது. அங்கு கொரோனாவால் தினசரி பாதிப்பும், உயிரிழப்பும் இந்தியாவிலேயே அதிகமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் கேரளாவில் ‘நிபா’ வைரஸ் தாக்கி 12 வயது சிறுவன் பலியாகி இருக்கிறான். மேலும் பலரை இந்த நோய் தாக்கி உள்ளது. இதனால் கேரள மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். 

உயிர் கொல்லி நோயான நிபா வைரஸ் மேலும் பரவி விடாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் முதலில் தென் ஆப்பிரிக்காவில்தான் தென்பட்டது. அது குரங்கில் இருந்து மனிதர்களுக்கு பரவியது தெரிய வந்தது. கேரளாவில் 2018ஆம் ஆண்டும் இதே போல் நிபா வைரஸ் பரவியது. அப்போது 17 பேர் உயிரிழந்தனர். இப்போது மீண்டும் அந்த நோய் பரவி இருப்பதால் கடும் அச்சுறுத்தலை உருவாக்கி உள்ளது.

நிபா வைரஸ் நோயை கட்டுப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் தற்போது நிபாவுக்கு தடுப்பூசி மருந்தை  உருவாக்கி இருக்கிறார்கள். இங்கிலாந்தில் உள்ள ஜென்னர் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அமெரிக்க தேசிய சுகாதார மையம் ஆகியவை இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

 வைரசின் மரபணுவை பகுத்தாய்வு செய்து அதன் மூலம் இந்த தடுப்பூசி மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. அதை 8 வகையான குரங்குகளுக்கு செலுத்தி சோதனை செய்து பார்த்தார்கள். அது நன்றாக வேலை செய்வது தெரிய வந்தது. ஆப்பிரிக்க பச்சை வகை குரங்கின் வைரசை இந்த தடுப்பூசி முழுமையாக அழிப்பதை காண முடிந்தது. சிரியா ஹேம்ஸ்டர் என்ற எலிக்கும் சோதனை செய்து பார்த்தார்கள். அதுவும் வெற்றிகரமாக வேலை செய்கிறது. இன்னும் பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற இருக்கின்றன.

அதிலும் வெற்றி கிடைத்தால் பயன்பாட்டுக்கு வரும். இந்த மருந்துக்கு ‘சாட் ஆக்ஸ் &1’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எனினும் தற்போதைய சூழலுக்கு நிபா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருமா என்ற தகவல் வெளிடப்படவில்லை.

newstm.in
 

Tags:    

Similar News