மிரட்டும் அரண்மனை 3 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு!

மிரட்டும் அரண்மனை 3 ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியீடு!

Update: 2021-04-22 11:40 GMT

தமிழ் சினிமாவில் ஹாரர் கதைகள் டிரெண்டிங்கில் இருந்த போது வெளியான படம் அரண்மனை. சுந்தர். சி இயக்கி நடித்திருந்த இந்த படத்தில் வினய், ஆண்ட்ரியா, லக்‌ஷ்மி ராய் மற்றும் ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து வெளியான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்ஷ், த்ரிஷா, கோவை சரளா, மனோபாலா, சூரி ஆகியோருடன் ஹன்சிகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படமும் ஹிட்டானது.

இந்நிலையில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சுந்தர்.சி. இந்த படத்தையும் அவரே இயக்கி நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு அரண்மனை 3 படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.


இந்த படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அவர்களுடன் மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு உள்ளிடோர் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளனர். அரண்மனை 3 படத்தை குஷ்புவின் சொந்த நிறுவனமான் ஆவ்னி சினி மேக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News