புதிய பிஎஸ்6 மாருதி சுஸுகி இக்னிஸ் கார் விற்பனைக்கு அறிமுகம்- விலை எவ்வளவு தெரியுமா..?

ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் காட்சிப்படுத்திய பிஎஸ்-6 இக்னிஸ் கார் ரூ. 4.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

Update: 2020-02-19 01:12 GMT

ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி நிறுவனம் காட்சிப்படுத்திய பிஎஸ்-6 இக்னிஸ் கார் ரூ. 4.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் அல்லது 5 ஏ.எம்.டி டிரான்ஸ்மிஷனுடன் கூட்டணி வைத்துள்ள இந்த எஞ்சின் 83 பிஎச்பி பவர் மற்றும் 113 என்.எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக வழங்கும்.

புதிய மாருதி சுஸுகி இக்னிஸ் பிஎஸ்-6 காரில் ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் உள்ளன. குரல் வழியில் கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வசதியும் இந்த காரில் உள்ளது.வெறும் எஞ்சின் தரம் மட்டுமில்லாமல், ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்குரிய பல்வேறு புதிய ஸ்டைலிங் அம்சங்கள் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிக்மா, டெல்டா, ஜெட்டா மற்றும் ஆல்பா என நான்கு வேரியன்டுகள் இந்த புதிய காரில் இடம்பெற்றுள்ளன.

                                            

அதன்படி, பிஎஸ்6 மாருதி சுஸுகி இக்னிஸ் காருக்கு ரூ. 4.83 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) ஆரம்ப விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனுடைய உயர் ரக மாடலுக்கு ரூ. 7.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலை அறிவிக்கப்பட்டுள்ளது.மாருதி சுஸுகியின் நெக்ஸா டீலர்ஷிப் மூலமாக பிஎஸ்-6 இக்னிஸ் கார் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய காருக்கான முன்பதிவு, முன்பணம், ஆன்-ரோடு விலை மற்றும் டெலிவிரி தொடர்பான தகவல்களை அருகிலுள்ள நெக்ஸா மையத்தை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் கேட்டறியலாம்.

newstm.in

Tags:    

Similar News