இன்று (8.5.21) முதல் புதிதாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்யும் கோவின் செயலியில் ஒரு 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகப்படுத்தப்படுகிறது.


கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவோர்,  ‘கோவின்’ இணையதளத்தில் முன்பதிவு செய்து, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் தடுப்பூசி போட செல்ல வேண்டும். அப்படி குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போட செல்லாதவர்களுக்கும், அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக குறுந்தகவல்கள் இதுவரையில் வந்தது. அது குறித்து ஆராய்ந்தபோது, பெரும்பாலும் தடுப்பூசி போடும் அமைப்பினர், தடுப்பூசி போடப்பட்டதாக தவறாக தகவல் பதிவு செய்ததே அதற்கு காரணம் எனத் தெரியவந்தது.

இந்த தவறுகளை சரி செய்ய, இன்று முதல், பதிவு செய்பவர்களின் அலைபேசிக்கு புதிதாக 4 இலக்க பாதுகாப்பு எண் அறிமுகப்படுத்தப்படுகிறது. தடுப்பூசிக்காக முன்பதிவு செய்ததும், அந்த 4 இலக்க எண் அவர்களின் செல்போனுக்கு வரும்.  அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் போது, தங்களது அலைபேசிக்கு வந்த 4 இலக்க எண்ணை குறிப்பிட்டு, அந்த ரகசிய எண் கோவின் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.  இந்த புதிய முறையினால், தடுப்பூசி போடுவோர் குறித்த தவறான தகவல் பதிவு தடுக்கப்படும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags: