மாணவ, மாணவிகளுக்கு பாலின பாகுபாடு அகற்ற சீருடை அறிமுகம்.. அசத்திய அரசு பள்ளி !

மாணவ, மாணவிகளுக்கு பாலின பாகுபாடு அகற்ற சீருடை அறிமுகம்.. அசத்திய அரசு பள்ளி !

Update: 2021-12-16 06:30 GMT

பள்ளி மாணவர்களிடம் ஏற்படும் பாலின பாகுபாட்டை அகற்றும் வகையில் கேரளாவில் ஆண், பெண் என இருபாலின மாணவர்களுக்கும் ஒரே சீருடையை வழங்கி பள்ளி நிர்வாகம் அசத்தலான நடவடிக்கையை எடுத்துள்ளது.  

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பாலின சமத்துவம் பற்றி பரவலாக பேசப்பட்டு வரும் காலம் இது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் அணைத்து துறைகளிலும் கலக்கி வருகின்றனர். எனினும் பல இடங்களில் பாலின வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் பள்ளி மாணவர்களிடையே பாலின சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு பாலின பாகுபாடற்ற சீருடையை அறிமுகப்படுத்தி உள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தின், பாலுசேரியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் இந்த பாலின பாகுபாடற்ற சீருடை செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் 200 மாணவிகள் ஆண்களை போல மேல் சட்டையும், பேண்டும் அணிந்துகொண்டு பள்ளிக்கு வந்தனர். 

மாணவர்களும் மாணவிகளும் ஒரே வகையான சீருடை அணிந்து காணப்பட்டனர். இதனை மாணவர்களும் வரவேற்றனர். இதுகுறித்து அப்பள்ளியின் முதல்வர் கூறுகையில், சீருடை மாற்றம் குறித்து பணியாளர் கவுன்சில் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. எனினும் கேரளாவில் இந்த நடவடிக்கை இது முதல்முறையல்ல. 

பாலின பாகுபாடற்ற சீருடை என்பது கேரளாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் எர்ணாகுளம் மாவட்டத்தின் வலையஞ்சிரங்காராவில் உள்ள பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News