பிஎஸ்-6 ஹோண்டா யுனிகார்ன் பைக் விற்பனைக்கு அறிமுகம்
ஹோண்டா நிறுவனம் பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமாக உற்பத்தி செய்துள்ள புதிய யுனிகார்ன் பைக் ரூ. 93,593 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமாக உற்பத்தி செய்துள்ள புதிய யுனிகார்ன் பைக் ரூ. 93,593 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் வாகனங்களை மட்டுமே வாங்கவும் விற்கவும் முடியும். இதை முன்னிட்டு கடந்தாண்டு முதலே பெரும்பாலான வாகன நிறுவனங்கள் புதிய விதிகளுக்கு ஏற்றவாறு வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.அந்த வரிசையில் ஹோண்டா நிறுவனம், தன்னுடைய லைன் அப்பிலுள்ள இருசக்கர வாகனங்களை பிஎஸ்-6 தரத்திற்கு இணையாக மேம்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்து வந்தது. தற்போது புதிய விதிகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்டுள்ள யுனிகார்ன் பைக் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.
இந்த பைக்கில் 160சிசி பிஜிஎம்-எஃப்.ஐ ஹோண்டா ஈகோ டெக்கானலஜியுடன் கூடிய எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 14 பிஎச்பி பவர் மற்றும் 14 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மேலும், இந்த மாடல் பியர்ல் இக்னியஸ் பிளாக், இம்பீரியல் ரெட் மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ்ட் கிரே மெட்டாலிக் ஆகிய மூன்று நிறத் தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.முந்தைய மாடலை விட, இந்த பைக்கின் பரிணாமங்கள் கூட்டப்பட்டுள்ளன. அதன்படி பிஎஸ்-6 யுனிகார்ன் மாடலினுடைய கிரவுன்டு கிளையரன்ஸ் 8 மிமீ கூடியுள்ளது, அதேபோல இதற்கு நீளமான வீல்பேஸ் வழங்கப்பட்டுள்ளன. முந்தைய வெர்ஷனைப் போலவே, இந்த புதிய மாடலும் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in