ஐபோன் ஆசை.. போலி விளம்பரத்தால் பெரும் தொகையை இழந்த இளம் பொறியாளர் !
ஐபோன் ஆசை.. போலி விளம்பரத்தால் பெரும் தொகையை இழந்த இளம் பொறியாளர் !
முகநூல் விளம்பரத்தின் மூலம் அகமதாபாத்தைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் ஒருவரை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஹைடெக் திருடர்கள் ஏமாற்றி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொறியாளரிடம் குறைந்த விலையில் ஐபோன் 11 போன் தருவதாக சொல்லி இந்த மோசடி வேலையை திருடர்கள் மேற்கொண்டுள்ளனர். அது தொடர்பாக ஏமாற்றப்பட்ட 27 வயதான பொறியாளர் கந்தர்ப் பட்டேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
நவீனமயமாகிவிட்ட இன்றைய காலக்கட்டத்தில் எல்லாம் டிஜிட்டல் டிஜிட்டல் என்றாகிவிட்டது. வீட்டில் இருந்தே உணவு, அத்தியாவசியப் பொருட்கள், அன்றாட பயன்படுத்தும் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். அதேபோல் நாம் பொழுதுபோக்க மைதானத்திற்கோ, நண்பர்களோ தேவையில்லை. வீட்டில் இருந்த செல்போன் மூலம் உலகை கையில் வைத்துக்கொண்டு பொழுதை போக்கலாம். ஆனால் அதில் அத்தனை ஆபத்துகள் உள்ளது என்பது தான் உண்மை.
அந்த வகையில் நடந்த ஒருதுளி உதாரணம் தான் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒருவருக்கு நடந்துள்ளது. கட்டிட பொறியாளரான கந்தர்ப் பட்டேல் (27) போலீசாரிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், கடந்த ஜனவரி மாதம் எனது முகநூல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் 70000 ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 11 போன் வெறும் 24000 ரூபாய்க்கு கிடைப்பதாக சொல்லப்பட்டிருந்தது. உடனடியாக நான் அதிலிருந்து எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் போனை எடுத்தவர் தன்னை ‘ராணுவ அதிகாரி’ என சொல்லி அறிமுகம் செய்து கொண்டார்.
முதலில் 4000 ரூபாய் தபால் செலவுக்காக கொடுத்தேன். தொடர்ந்து ராணுவ வழக்கத்தின் படி போனின் மொத்த தொகையில் பாதியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என சொல்லியதாகவும். அப்படி செய்தால் 24000 ரூபாய் போக மற்ற தொகை மீண்டும் எனது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என சொன்னார்கள். அதை நானும் நம்பி பணத்தை செலுத்தி விட்டேன். அப்படி ஒரு 60000 ரூபாய் வரை பணம் கொடுத்தேன். ஆனால் போன் எனக்கு வரவே இல்லை. அதனால் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்து புகார் கொடுத்துள்ளேன். குற்றவாளியை துரிதமாக கண்டுபிடிக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
இளம் பட்டதாரி ஒருவர் இவ்வாறு ஏமாற்றம் அடைந்திருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. அனைவரும் விழிப்புடன் இருந்தால் தான் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.
newstm.in