IPL: ராஜஸ்தான் அணிக்கு மேலும் சிக்கல்.. பென் ஸ்டோக்ஸை அடுத்து ஜோஃரா ஆர்சர் !!
IPL: ராஜஸ்தான் அணிக்கு மேலும் சிக்கல்.. பென் ஸ்டோக்ஸை அடுத்து ஜோஃரா ஆர்சர் !!
இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஐபிஎல் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடுமையாக தடுமாறி வருகிறது. கடந்த ஆண்டு எழுச்சியுடன் விளையாடிய அந்த அணி இந்தாண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சர் முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஆர்சர் இங்கிலாந்தில் தங்கியிருக்கிறர். எனினும் அவர் ஐபிஎல் சீசனின் ஆரம்பத்தில் போட்டிகளை தவறவிட்டாலும் கூட இறுதிக் கட்டத்தின் ராஜஸ்தான் அணியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஆர்சர் ஐபிஎல் சீசனில் விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் ஐபிஎல் போட்டிகளுக்காக இந்தியா வரமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. ஐபிஎல் முடிந்ததும் நடைபெற இருக்கும் டி-20 உலகக்கோப்பை தொடருக்கு அவர் தகுதிபெற உள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் எ ன கூறப்படுகிறது.
அந்த வகையில், காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆர்சர், சஸ்செக்ஸ் அணியில் வரும் வாரத்தில் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் எனவும் அவர் பிரச்னையின்றி தொடர்ந்து பந்துவீசினால் 2 வாரத்தில் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த போட்டியில் அவர் களம் காணுவார் என்பது பின்னர் தெரிவிக்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரும் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் பஞ்சாப் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஃபீல்டிங்கின் போது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரும் இங்கிலாந்து திரும்பிவிட்டார். இந்த நிலையில் ஆர்ச்சரும் இல்லாதது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது.
ஏற்கனவே பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் சொதப்பி வருகிறது. இதன் காரணமாக 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி ஒரு வெற்றி, 3 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவை ராஜஸ்தான் அணி எதிர்கொள்கிறது.
newstm.in