IPL: மீண்டும் ஹீரோவானார் தவான்.. சாம்பியனை வீழ்த்திய டெல்லி !!

IPL: மீண்டும் ஹீரோவானார் தவான்.. சாம்பியனை வீழ்த்திய டெல்லி !!

Update: 2021-04-21 06:30 GMT

ஐபிஎல் 14ஆவது சீசன் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 13ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா - டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். டி காக் 1 ரன்னில் வெளியேறினார் அதிர்ச்சி அளித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆனால், சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், ரோகித் சர்மா 44 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா (0), பொல்லார்டு (2) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறியதால் மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் தடுமாற்றம் அடைந்தது. இதனால் மும்பை அணி 100 ரன்னை எட்டுமா என பரபரப்பு எழுந்தது. எனினும் இஷான் கிஷனை 26 ரன்னும் நேரத்தில் பவுலர்கள் அடித்த ரன்களாலும் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன்கள் அடித்துள்ளது.

டெல்லி அணி சார்பில் அமித் மிஷ்ரா 4 விக்கெட்டும், அவேஷ் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரர் பிரித்வி ஷா 7 ரன்ன்னில் அவுட்டானார். அடுத்துவந்த  ஸ்மித்  ஷிகர் தவானுடன் இணைந்து சேர்ந்து பொறுப்புடன் ஆடினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 33 ரன்னில் வெளியேறினார்.

அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 7 ரன்னில் பெவிலியன் திரும்பினார். எனினும் டெல்லி அணியின் பக்கமே வெற்றி இருந்தது. 

குறிப்பாக கடைசி 3 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. 18வது ஒவரில் ஹெட்மயர் பவுண்டரி அடிக்க 7 ரன்கள் கிடைத்தது. 19வது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. லலித் யாதவும் ஹெட்மயரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இறுதியில், டெல்லி அணி 19.1 ஓவரில்  4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டெல்லி அணி தனது 3வது வெற்றியை பதிவு செய்தது. 4 விக்கெட்களை சாய்த்த அமித் மிஸ்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

newstm.in

Tags:    

Similar News