ஐ.பி.எல்: டெல்லி அணியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட கொல்கத்தா !!

ஐ.பி.எல்: டெல்லி அணியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்ட கொல்கத்தா !!

Update: 2021-09-28 19:28 GMT

அமீரகத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. முதலில் நடந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயன் மோர்கன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினர்.

கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் டெல்லி அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பவர்பிளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது. 

டெல்லி அணி தரப்பில்  அதிகபட்சமாக கடைசி வரை போராடிய ரிஷப் பண்ட் 36 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார்.  20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணியின் சுனில் நரைன் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.கொல்கத்தா அணி தரப்பில் லோக்கி பெர்குசன், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சவுத்தி 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனையடுத்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர் கில் இன்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐய்யர் 14 ரன்னிலும், திரிபாதி 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் மோர்கன் டக் அவுட்டாகினார்.

அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்ததால் இறுதி நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 7ஆவது விக்கெட்டாக களமிறங்கிய சுனில் நரேன் அதிரடி காட்டினால். 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். எனினும் இவரது அதிரடியால் ரன்விகிதம் அதிகரித்ததால், கொல்கத்தா அணி வெள்ளிபெற்றது. நிதிஷ் ராணா 36 ரன்கள் எடுத்து வெற்றிக்காக போராடி கடைசி வரை களத்தில் நின்றார். 
 

newstm.in


 

Tags:    

Similar News