IPL: SRH அணியின் பயிற்சியாளர்களாக லாரா, ஸ்டெயின், பதானி நியமனம் !

IPL: SRH அணியின் பயிற்சியாளர்களாக லாரா, ஸ்டெயின், பதானி நியமனம் !

Update: 2021-12-24 08:30 GMT

ஐபிஎல் 2022 தொடருக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிரையன் லாரா மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோரை புதிய பயிற்சியாளராக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல் தொடரில் மரண அடி வாங்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி. எந்த வீரரும் பெரியளவில் திறமையை வெளிப்படுத்தாத நிலையில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கும் தள்ளப்பட்டது. இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் பல்வேறு அதிரடிய முடிவுகளை எடுத்துள்ளது. 

அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்து நிர்வாகம் அறிவித்துள்ளது. பிரையன் லாராவை பேட்டிங் பயிற்சியாளராகவும், டேல் ஸ்டெயினை வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் அணியின் இணைய உள்ளனர்.

முத்தையா முரளிதரன் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் மற்றும் உத்தி வகுப்பாளராக தொடர்கிறார். அதே நேரத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி பீல்டிங் பயிற்சியாளராக இருப்பார். முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டாம் மூடி அணியின் தலைமைப் பயிற்சியாளராக தனது பணியை தொடர்வார். இவ்வாறு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, அடுத்தாண்டு மெகா ஏலம் நடைபெறவுள்ள நிலையில், கேன் வில்லியம்சன், அப்துல் சமது, அதிவேக காஷ்மீர் பவுலர் உம்ரன் மாலிக் ஆகியோரை தக்க வைத்துள்ளது.  

ஐபிஎல் தொடரின் போது டேவிட் வார்னரை அனாவசியமாக கேப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டு, அவரை அணியிலிருந்தும் நீக்கியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம். மேலும் அணியில் அவர் தக்கவைக்கப்படவில்லை. இதனால் ஏலத்தில் வார்னருக்கு கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  


newstm.in

Tags:    

Similar News