இந்த 4 இடங்களில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்!!

இந்த 4 இடங்களில் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்!!

Update: 2022-01-23 20:57 GMT

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக .பி.எல். 2022 கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு 4 இடங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் போட்டிகளை மிகுந்த எச்சரிக்கையுடன் நடத்துவதற்கு பிசிசிஐ முனைப்பு காட்டி வருகிறது. தற்போது வரை அனைத்து போட்டிகளையும் மும்பையில் நடத்தி விடலாம் என்றும் பார்வையாளர்கள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் வான்கிடே, சிசிஐ, டி.ஒய். பாட்டீல் ஆகிய 3 மைதானங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் புனே மைதானமும் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்தால் போட்டிகளை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி ஐக்கிய அரபு அமீரகமும் பிசிசிஐ பரிசீலனையில் இருக்கிறது.

போட்டி தொடங்குவதற்கு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பாக வீரர்கள் பயோ பப்பிள் சூழலில் இருக்க வேண்டும் என்பதால், ஏப்ரல் 2ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

நடப்பு தொடரில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அவை போட்டிகள் இந்தியாவில் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இலங்கையில் ஐபிஎல் தொடரை நடத்தலாமா என்பது குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

newstm.in

Similar News