IPL: ஒரு போட்டியில் கூட விளையாடல- ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் சச்சினின் மகன் !!

IPL: ஒரு போட்டியில் கூட விளையாடல- ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார் சச்சினின் மகன் !!

Update: 2021-10-01 08:00 GMT

ஐபிஎல் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. போட்டிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா காரணமாக பாதியில் ஆட்டங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

 இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட போட்டியில் தற்போது, ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அனைத்து அணிகளும் கடுமையாக போராடி வருகிறது. இதில் முதல் அணியாக சிஎஸ்கே பிளே ஆஃப்-க்கு சென்றுவிட்டது. 

இந்த 14ஆவது சீசனில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இது இவருக்கு முதல் சீசன் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆல்ரவுண்டரான அர்ஜூன் டெண்டுல்கரின் ஆட்டத்தை காண அனைவரும் எதிர்பார்ப்பில இருந்தனர். 

இருப்பினும், ஒரு போட்டியில்கூட இவர் களமிறக்கப்படவில்லை. இனிவரும் போட்டிகளிலாவது களமிறக்கப்படுவாரா என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், அர்ஜூன் டெண்டுல்கர் திடீரென ஐபிஎல் 14ஆவது சீசனிலிருந்து விலகவிட்டார். இதனை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இவருக்கு மாற்றாக டெல்லியைச் சேர்ந்த புதுமுக வீரர் சமர்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மும்பை இந்தின்ஸ் அணி நிர்வாகம், காயம் காரணமாக ஐபிஎல் 14ஆவது சீசனிலிருந்து அர்ஜூன் டெண்டுல்கர் விலகியுள்ளார். இவருக்கு மாற்றாக வேகப்பந்து வீச்சாளர் சமர்ஜீத் சிங் சேர்க்கப்பட்டுள்ளார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான அவர், தனிமை முகாமில் இருந்தப் பிறகு அணியில் இணைந்துகொள்வார் எனத் தெரிவித்துள்ளது.

சமர்ஜீத் சிங் (23) இதுவரை 19 லிஸ்ட் ஏ போட்டிகளில் பங்கேற்று 19 விக்கெட்களையும், 15 டி20 போட்டிகளில் 18 விக்கெட்களை கைப்பற்றியிருக்கிறார். சமீபத்தில் இலங்கை சென்ற இளம் இந்திய அணியில் நெட் பௌலராக இருந்த அவர், அப்போது க்ருனால் பாண்டியா உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதியானபோது அணியில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Tags:    

Similar News