தோனி அடுத்தப் போட்டியில் விளையாடுவதில் புதிய சிக்கல் !! ரசிகர்கள் அதிர்ச்சி

தோனி அடுத்தப் போட்டியில் விளையாடுவதில் புதிய சிக்கல் !! ரசிகர்கள் அதிர்ச்சி

Update: 2021-04-19 16:33 GMT

இந்தியாவில் ஐபிஎல் 14ஆவது சீசன் திருவிழா தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இன்று சென்னை அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதனிடையே இப்போட்டியின் மூலம் கேப்டன் தோனிக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. 

ஏற்கனவே, சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 188 ரன்கள் குவித்தது.  சென்னை அணி நிர்ணயித்த இந்த இலக்கை 18.4 ஓவரில் இந்த இலக்கை எட்டிப்பிடித்து எளிதாக வென்றது டெல்லி கேப்பிடல்ஸ். 

முன்னதாக சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த அணியின் கேப்டன் தோனிக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் இது முதல்தடவை என்பதால் டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்ந்தால் ஒரிரு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். 

ஐ.பி.எல் போட்டியில் 20 ஓவர் கொண்ட ஒரு இன்னிங்ஸை 90 நிமிடங்களில் முடிக்க வேண்டும் என்பது விதியாகும். ஒரு மணிநேரத்துக்கு 14.1 ஓவர்கள் வீசினால்தான் குறிப்பிட்ட நேரத்தில் இன்னிங்ச்ஸை முடிக்க முடியும். 2ஆவது தடவை இதுபோல் அதிகநேரம் எடுத்துக்கொண்டால் கேப்டனுக்கு 24 லட்சம் அபராதமும் அணி வீரர்களுக்கு 6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் 25 சதவிகிதம் எது குறைவாக உள்ளது அது அபராதமாக விதிக்கப்படும்.

3-வது முறை இதுபோல் நிகழ்ந்தால் கேப்டனுக்கு 30 லட்சம் அபராதம் கேப்டன் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும். அணி வீரர்களுக்கு 12 லட்சம் அபராதம் அல்லது போட்டி கட்டணத்தில் 50 சதவிகிதிம் எது குறைவாக உள்ளதோ அது அபராதமாக விதிக்கப்படும் என ஐ.பி.எல் விதிமுறை கூறுகிறது.

இதனால் இன்றைய போட்டியில் அதிகம் கவனிக்கப்படும் எனக் கூறப்படுகின்றது.

newstm.in

Tags:    

Similar News