நடிகர் விஜய் ஏழை மாணவர்களுக்காக புதிய பள்ளிகூடம் கட்டுகிறாரா? உண்மை என்ன ??

நடிகர் விஜய் ஏழை மாணவர்களுக்காக புதிய பள்ளிகூடம் கட்டுகிறாரா? உண்மை என்ன ??

Update: 2021-12-19 13:36 GMT

ஏழை மாணவர்கள் இலவசமாக படிப்பதற்காக சென்னையை அடுத்த திருப்போரூரில் நடிகர் விஜய் ஒரு பள்ளிக்கூடம் கட்டுவதாக தகவல் பரவி இருக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த தகவலை பதிவிட்டு பலரும் புகழ்ந்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்த உண்மையான அப்டேட் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பள்ளிக்கூடம் கட்டுவது உண்மை தான் ஆனால் அதனை கட்டுவது நடிகர் விஜய் அல்ல. அவருடைய உறவினர் பிரிட்டோ என்பது தெரியவந்துள்ளது. இவர் ஒரு கல்லூரி பேராசிரியராக பணியாற்றி புகழ் பெற்றவர்.

பிரிட்டோ, நடிகர் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்துள்ளார். அவருக்கு சொந்தமாக ஏற்கனவே ஒரு கல்லூரியும், பள்ளிக்கூடமும் இருக்கிறது. தற்போது திருப்போரூரில் கட்டுவது, இரண்டாவது பள்ளிக்கூடம்.

இந்த பள்ளிக்கூட கட்டுமான பணிகளை சமீபத்தில் விஜய் சுற்றிப்பார்த்தார். இது குறித்த தகவல்கள் வெளிவந்தன. உடனே விஜய் தான் பள்ளிக்கூடம் கட்டி வருகிறார் என்று வதந்தியை வழக்கம்போல் பரப்பி விட்டார்கள் என்ற புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.  

newstm.in

Similar News