காலதாமதம் தான் பிரச்சனையா?- போலீஸ்காரரை கடுமையாக தாக்கிய Swiggy டெலிவரி பாய் !

காலதாமதம் தான் பிரச்சனையா?- போலீஸ்காரரை கடுமையாக தாக்கிய Swiggy டெலிவரி பாய் !

Update: 2021-12-24 07:00 GMT

சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் ஜார்ஜ் பீட்டர்  என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து  வருகிறார். ஜார்ஜ் பீட்டர் , பிரபல ஆன்லைன் நிறுவனமான ஸ்விக்கியில் போன்லெஸ் சிக்கன்(boneless chicken) மற்றும் சாப்பாடு ஆகியவற்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ஆர்டர் செய்தும் நீண்டநேரமாக உணவு வரவில்லை என கோவத்தில் இருந்துள்ளார்.

இந்த நிலையில்  காலதாமதமாக உணவை டெலிவரி ஊழியர் கார்த்திக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அந்த வேளையில், போதையில் இருந்த தலைமை காவலர், உணவு டெலிவரி செய்த கார்த்திக்கை கடுமையாக பேசியதுடன், உணவை வாங்கி குப்பையில் வீசியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரமடைந்த உணவு டெலிவரி ஊழியர் கார்த்திக் தனது கையில் வைத்திருந்த தலைக்கவசத்தால் தலைமை காவலரை கடுமையாக தாக்கியுள்ளார். தாடையிலிருந்து ரத்தம் வந்த நிலையிலும் கால் நடக்க முடியாத சூழ்நிலையில் துடித்த காவலர் ஜார்ஜ் பீட்டரை உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் கால் எலும்பு உடைந்துள்ளதாகக் கூறி சிகிச்சை அளித்தனர்.

மேலும், இதுகுறித்து தலைமை காவலர் எம்ஜிஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆன்லைன் டெலிவரி ஊழியர் கார்த்திக்கை கைது செய்தனர். அதேநேரம், குடிபோதையில் ஆன்லைன் டெலிவரி ஊழியரிடம் தகராறில் ஈடுபட்ட தலைமை காவலர் ஜார்ஜிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Similar News