ஒமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரோனா தொற்றா?- உலக சுகாதார அமைப்பு மறுப்பு !

ஒமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரோனா தொற்றா?- உலக சுகாதார அமைப்பு மறுப்பு !

Update: 2022-01-10 18:15 GMT

உலகம் முழுவதும் கொரோனா, டெல்டா கொரோனா தற்போது ஒமைக்ரான் பரவி மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதில் இருந்து மீண்டு வர மக்களும், மருத்துவத்துறையினரும், அரசுகளும் போராடுகின்றனர். இந்தியாவில் தற்போது மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், ஒமைக்ரான் வகை கொரோனாவை தொடர்ந்து டெல்டாகிரோன் எனப்படும் புதிய வகை வைரஸை கண்டுபிடித்ததாக சைப்ரஸ் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருந்தனர். இதனால் இதுஎன்னடா சோதனை என அச்சப்படும் வேதனைப்படும் அளவுக்கு மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஆனால்,  டெல்டாகிரோன் எனப்படும் புதிய வகை தொற்று உண்மையான வைரஸ் அல்ல என்று உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான நிபுணர் டாக்டர் கிருத்திகா குப்பள்ளி தெரிவித்துள்ளார்.

கோவிட் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினரான கிருத்திகா குப்பள்ளி தனது சுட்டுரைப் பக்கத்தில் இது பற்றி கூறியிருப்பதாவது, டெல்டாக்ரோன் என்பது உண்மையான வைரஸ் அல்ல, மற்றும் இது ஆய்வாகச் சோதனையின் போது உருவான கழிவுகளில் ஒன்றாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
 


இவ்வாறு இரண்டு தொற்றுகளின் பெயர்களை ஒன்றிணைத்து புதிய தொற்றுகளுக்குப் பெயர் வைக்க வேண்டாம், அவற்றை பிரபலமான நட்சத்திர தம்பதிகளுக்கே விட்டுவிடலாம் என்றும் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

ஒரு புதிய வகை தொற்றுக் கண்டறியப்பட்டு சில வாரங்கள் அல்லது சில மாதங்களுக்குப் பிறகுதான், அதன் உருமாறிய அடுத்த வகை வைரஸ் உருவாகும். ஆனால், ஒமைக்ரான் கண்டறியப்பட்டு ஒரு சில வாரங்களே ஆகியுள்ளன. எனவே, அதற்குள் உருமாறிய புதிய வகை வைரஸ் உருவாவதில் சந்தேகமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.


newstm.in

Tags:    

Similar News