“விவாதம் செய்ய திமுக தயாரா..?” - அழைக்கிறார் ஆர்.பி.உதயகுமார்..!

“விவாதம் செய்ய திமுக தயாரா..?” - அழைக்கிறார் ஆர்.பி.உதயகுமார்..!

Update: 2021-06-28 14:17 GMT

கடந்த ஆட்சிக்காலத்தில் மின்சாரத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், அதிமுக தலைமையிலான அரசு ரூ.14 ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்துள்ளது என்றும் திமுக அரசு குற்றம் சாட்டியது.

இந்நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “மின்சாரத் துறை தொடர்பாக தணிக்கைத் துறை வெளியிட்ட தகவல்கள் தவறானது. தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு எந்த விதமான ஆதாரமும் கிடையாது.

தணிக்கைத் துறை என்பது எந்த ஆட்சி நடந்தாலும், யூகத்தின் அடிப்படையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில், கடந்த 2018ம் வருடம் மின்சார வாரியத்தில் ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதை தவிர்த்து, ஊழல் எதுவும் நடைபெறவில்லை " என்று தெரிவித்தார்.

மதுரையில், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், “கடந்த 2006 - 2011 தணிக்கைத் துறை வெளியிட்ட தகவலை வைத்து விவாதம் செய்ய திமுக தயாரா..? அதற்கு திமுக பொறுப்பேற்குமா..?. அப்போது ஏற்பட்ட நஷ்டம் உங்களின் கணக்கில்தான் வரும். முன்னாள் அமைச்சர் தங்கமணி அளித்துள்ள விளக்கம் சரியானதே. மின்சாரத் துறையில் எந்த ஊழலும் நடக்கவில்லை’ என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News