நயன்தாரா ஊசி போட்டுக்கொண்டது உண்மை தானா..? நெட்டிசன்கள் கேள்வி..!

நயன்தாரா ஊசி போட்டுக்கொண்டது உண்மை தானா..? நெட்டிசன்கள் கேள்வி..!

Update: 2021-05-19 18:50 GMT

நடிகை நயன்தாரா உண்மையாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸை எதிர்க்கும் ஒரே ஆயுதமாக உள்ளது தடுப்பூசி. இதனால் மக்களிடையே தடுப்பூசி மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசு பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். அதை தொடர்ந்து பல்வேறு நடிகர்களும் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். அந்த வரிசையில் நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் இருவரும் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியான நிலையில், உண்மையாகவே நயன்தாரா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி புகைப்படத்தில் நயன்தாராவுக்கு ஊசி போடும் செவிலியரின் கையில் ஊசி இல்லையே என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

இதனால் சமூகவலைதளங்கள் முழுக்க இதுதொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. நயன்தாராவின் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நெட்டிசன்கள் பலரும் ஊசி எங்கே என கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். 

Tags:    

Similar News