ஒமைக்ரான் பெரும் ஆபத்தா? : தொற்றில் இருந்து மீண்டவரின் கருத்து!!

ஒமைக்ரான் பெரும் ஆபத்தா? : தொற்றில் இருந்து மீண்டவரின் கருத்து!!

Update: 2021-12-06 08:50 GMT

ஒமைக்ரான் தொற்றை கண்டு அச்சமடைய வேண்டாம் என தொற்றில் இருந்து குணமடைந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து வந்த கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் எனும் வீரியமிக்க தொற்றாக உலகம் முழுவதும் பரவி வருகிறதுமுதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வகை கொரோனா தொற்றால் இதுவரையில் உலக முழுவதும் 370க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் என 21 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் குறித்து அதில் இருந்த மீண்ட 46 வயது மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.

அதன்படி, தனக்கு லேசான ஒமைக்ரான் தொற்று அறிகுறிகள் மட்டுமே இருந்தது. கொரோனா அறிகுறிகள் வந்தபின்னர் 13 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய அளவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், பாரசிட்டமால், மல்ட்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆக்சிஜன் அளவும் குறையவில்லை.தற்போது முழுமையாக நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

எனவே ஒமைக்ரான் தொற்று குறித்து மக்கள் அச்சப்படதேவையில்லை. கொரோனா அறிகுறிகள் தெரிந்தாலே மக்கள் உடனே பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கான தெளிவான சிகிச்சை குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் கூறப்படாத நிலையில் மருத்துவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

newstm.in

Similar News