ஒமைக்ரான் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துமா?- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை !
ஒமைக்ரான் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துமா?- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை !
டெல்டா வகையைவிட, ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து மக்கள் மீளத் தொடங்கிய நிலையில் பரவியது ஒமைக்ரான் என்னும் புதிய வகை கொரோனா தொற்று. கடந்தமுறை பரவிய கொரோனா தொற்று வகைகளை விட இது அதிவேகமாக மற்றவர்களுக்கு பரவக்கூடியது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருகின்றனர். அதேநேரத்தில், ஒமைக்ரான் பாதித்தாலும் டெல்டா வகையைவிட, ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும் என்ற தகவல் பரவி வருகிறது. இதனால் பலரும் மெத்தனமாக உள்ளனரா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், இந்த தகவலுக்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். லண்டனில் உள்ள இம்பிரியல் கல்லூரியின் ஆராய்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், டெல்டாவைவிட ஒமைக்ரான் 5.4 மடங்கு மீண்டும் தொற்றை ஏற்படுத்துவதாக கூறியுள்ளனர். மேலும், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் மனிதர்களிடையே உருவான எதிர்ப்பு சக்தியை ஒமைக்ரான் கொரோனா வகை குறைக்கிறது.
டெல்டா வகையைவிட, ஒமைக்ரான் கொரோனா வைரஸ் குறைந்த பாதிப்பையே ஏற்படுத்தும் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் நவம்பர் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை கொரோனா பாதித்த சுமார் 2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை 160க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in