இந்தியாவில் கட்டுக்குள் வருகிறதா ஒமைக்ரான்?- ரிஸ்க் நாடுகள் எண்ணிக்கை குறைப்பு !!
இந்தியாவில் கட்டுக்குள் வருகிறதா ஒமைக்ரான்?- ரிஸ்க் நாடுகள் எண்ணிக்கை குறைப்பு !!
கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய இந்தியாவில் தற்போது, வேகமாக பரவும் தன்மைகொண்ட ஒமைக்ரான் வகை கொரோனா பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒமைக்ரான் பரவலாம் என்ற ஆபத்தான நாடுகள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அந்த வகையில் ஆபத்தான நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஆபத்தான பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து பயணிகள் இந்தியா வந்ததும் விமான நிலையங்களிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னரும் அவர்களுக்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆபத்தான நாடுகளில் பட்டியலில் இருந்து சிங்கப்பூரை மத்திய அரசு நீக்கி உள்ளது. இதன்மூலம், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் கூடுதல் கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைப் பின்பற்ற தேவையில்லை. தற்போது இந்தியா வெளியிட்டுள்ள ரிஸ்க் நாடுகள் பட்டியலில், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, கானா, மொரிஷியஸ், நியூசிலாந்து, தான்சானியா, ஜிம்பாப்வே, ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் உள்ளன.
newstm.in