ஸ்பீக்கரில் பாட்டு போட்டது ஒரு குத்தமா? இளைஞருக்கு 3.5 ஆண்டுகள் சிறை !!
ஸ்பீக்கரில் பாட்டு போட்டது ஒரு குத்தமா? இளைஞருக்கு 3.5 ஆண்டுகள் சிறை !!
பக்கத்து வீட்டில் இருந்தவர்களை நள்ளிரவில் தூங்க விடாமல் அதிக சத்தங்களை எழுப்பியதால் அவருக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவின் நிஸ்னீ நோவ்ரூடு என்ற பகுதியில் 47 வயதான நபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வேலை போய்விட்டது. இவரது மனைவியும் இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். அன்று முதல் தினமும் இவரதுவீட்டில் சத்தமாக பாட்டு போடுவது குதிரை ஓடும் சத்தத்தை ஸ்பிக்கரில் போவது, குதிரை கனைக்கும் சத்தத்தை ஸ்பீக்கரில் போடுவது என மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் பல செயல்களை செய்து வந்துள்ளார்.
இது குறித்து பக்கத்து வீட்டுகாரர்கள் அவரிடம் பலமுறை முறையிட்டனர். எனினும் அவர் கேட்டப்பாடு இல்லை. மேலும் போலீசாரிடம் புகார் அளித்தும் பலனில்லை. போலீசார் அவரை பிடித்து எச்சரித்து அனுப்புகின்றனர் அல்லது அபராதம் விதித்துவிட்டு விட்டுவிடுகின்றனர். ஆனால் அவர் தனது செயலை மட்டும் நிறுத்தவில்லை.
தொடர்ந்து இரவில் அக்கம் பக்கத்தினரை தூங்க விடாமல் ஸ்பீக்கரை சத்தமாக வைத்து தொந்தரவு செய்து வருவதை வாடிக்கையாக்கியுள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் இவர் மீது 80 பேர் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையில் போலீசார் இவருக்கு மன நலம் சரியில்லாமல் இருக்கலாம் என மன நல மருத்துவமனைக்கு கூட்டி சென்று சோதித்தனர். ஆனால் அவர் மனதளவில் நார்மலாக இருப்பதாக ரிப்போர்ட் வந்தது. ‘
அதன்பின்னரும் புகார்கள் குவிந்ததால், அந்நபர் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக வழக்குபதிவு செய்து இவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இவரது வழக்கை விசாரித்த நீதிமன்றம் இவருக்கு 3.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. இவர் மீது வழக்கு போட்டும் கூட இவர் கைது செய்வதற்கு முந்தைய நாள் வரை இவர் அக்கம் பக்கத்தினரை ஸ்பீக்கரை சத்தமாக வைத்து தொந்தரவு செய்து வந்துள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்.
newstm.in