டெல்லியில் பதுங்கி இருக்கிறாரா ராஜேந்திர பாலாஜி!?

டெல்லியில் பதுங்கி இருக்கிறாரா ராஜேந்திர பாலாஜி!?

Update: 2021-12-29 19:15 GMT

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி  இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறை தேடி வருகிறது.

ஆனால் அவர் கடந்த 17 ஆம் தேதி முதல் தலைமறைவாக ள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை அமைத்து 13ஆவது நாளாக தேடி வருகிறது.

அதன்படி, கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை டெல்லிக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

newstm.in

Similar News