திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற பிரபல நடிகை காதலரை பிரிகிறாரா..?
திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்ற பிரபல நடிகை காதலரை பிரிகிறாரா..?
திருமணத்துக்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்ட பிரபல நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த காதலருடன் சேர்ந்திருந்த அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கியுள்ளார். இதனால், காதலரை பிரிந்து விட்டார் என தகவல் பரவி வருகிறது.
லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் தமிழில் ‘மதராசப்பட்டினம்’ படம் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ‘ஐ’, ‘தெறி’, ‘தாண்டம்’, ‘கெத்து’, ‘தங்கமகன்’, ‘2.0’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து வந்த எமி ஜாக்சன், திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொண்டார்.இவர்கள் இருவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு நிச்சயதார்த்தம் முடிந்தது. இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜார்ஜ் உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட அனைத்து படங்களையும் திடீரென்று நீக்கி உள்ளார்.
இதையடுத்து இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கெனவே நடிகைகள் த்ரிஷா, இலியானா ஆகியோர் இதே போன்று திருமணம் நிச்சயமான பின் புகைப்படங்களை நீக்கி திருமண முறிவை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.